Solothurn இல் Luzernstrasse இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நான்காவது மாடியில் இருந்து கடுமையான புகை வருவதை அவதானித்தவர்கள், தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவசர சேவையினர் உடனடியாக விரைந்து சென்று 3 பேரை மீட்டனர்.
மூன்றரை மணி நேரத்திற்குப் பிறகு தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பற்றிய எந்த தகவலையும் தற்போது வழங்க முடியாது என்ற காவல்துறையினர் தெரிவித்தனர்.
மூலம்- 20min

