Valais இல் உள்ள Zeneggen என்ற இடத்தில் ஆறு வயது சிறுவன் பஸ் மோதி உயிரிழந்தான்.
நேற்று மதியம் கிராமப் பாதையில், பஸ் பயணிகளின்றி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுவிஸ் சிறுவன், Lausanne பல்கலைக்கழக மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார்.
பலத்த காயம் காரணமாக அவர் அங்கு உயிரிழந்தார் என நேற்று மாலை Valais கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
மூலம்- bluewin

