கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் பொதிகளை விநியோகித்து புதிய சாதனை படைத்துள்ளது சுவிஸ் போஸ்ட்.
கடந்த டிசம்பர் 3, ஆம் திகதி இந்த சாதனை அளவு விநியோகம் இடம்பெற்றுள்ளது.
கறுப்பு வெள்ளி மற்றும் கிறிஸ்மஸ் இடையே, 22.3 மில்லியன் பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இது முந்தைய ஆண்டை விட 3.5 சதவீதம் அதிகமாகும்.
19,000 ஊழியர்கள் மற்றும் 500 தற்காலிக ஊழியர்களின் ஆதரவுடன் சுவிஸ் போஸ்ட் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மூலம்- Bluewin

