-0.7 C
New York
Tuesday, December 30, 2025

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- 3 பேர் காயம்.

Solothurn இல் Luzernstrasse இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 பேர் காயம் அடைந்தனர்.

நேற்று பிற்பகல் 3:30  மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீட்பு மற்றும் அவசர சேவைகள் சென்ற போது, ​​நான்காவது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்புவாசிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தீயணைப்புத் துறையினரின் முயற்சியால், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இறுதியாக முற்றிலும் அணைக்கப்பட்டது.

தீயினால் பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

ஆரம்ப மருத்துவ சிகிச்சை பெற்ற பிறகு, REGA மீட்பு ஹெலிகொப்டரில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் இருவர் புகையை சுவாசித்ததால், அவசர சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த தீவிபத்தால் பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு தற்போது வசிக்க முடியாத நிலையில் உள்ளன.

மூலம்- polizeinews

Related Articles

Latest Articles