வாகன விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு 10 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளதாக பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி முதல், சுவிட்சர்லாந்து அரசாங்கம், வாகனங்கள் தொடர்பான புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கமைய, ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், தேவையில்லாமல் வாகனங்கள் ஒலி எழுப்பினால், சாரதிகளுக்கு 10 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
அதேபோன்று அனைத்து மோட்டார் சைக்கிள்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புகை வெளியிடும் அளவு தொடர்பான விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல், சாரதி இல்லாமல் இயங்கும் வாகனங்களை இயக்குவோர், தங்கள் மாகாணத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க தன்னியக்க சாரதி முறைமை ஒன்றை பொருத்த வேண்டும்.
வாகனங்களை நிறுத்தி வைத்தல் தொடர்பாகவும், புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

