-0.7 C
New York
Tuesday, December 30, 2025

சூரியனை நெருங்கிய நாசா விண்கலம்.

நாசா அனுப்பிய விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகாமையில் பாதுகாப்பாகச் சென்றடைந்துள்ளது.

பாதிப்பு ஏதும் இன்றி அது சூரியனை நெருங்கியுள்ளதாக  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

விண்கலத்திலிருந்து சமிக்ஞைகள் வழமைபோல பெறப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

‘பாக்கர் சோலர்’ என பெயரிடப்பட்ட இந்த விண்கலத்தின் பயணத்தின் மூலம் எதிர்காலத்தில், சூரியனின் மேற்பரப்பிலிருந்து 38 இலட்சம் மைல்களுக்கு அப்பால் இருந்து பாதுகாப்பாக பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். 

தற்போது விண்கலம் பூமியிலிருந்து 9 கோடியே 30 இலட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles