Wassen மற்றும் Gurtnellen இடையே Gottardstrasse இல் இன்று அதிகாலை 4 மணியளவில் கார் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
Reuss பாலம் அருகே கார் 30 மீட்டர் ஆழத்தில் விழுந்தது.
விபத்தில் காரை ஓட்டிச் சென்ற 29 வயதுடைய பெண் பலத்த காயமடைந்தார்.
அவர் மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காயமடைந்த பெண் காரில் இரண்டு நாய்களை கொண்டு சென்றிருந்தார்.
அவற்றில் ஒன்று விபத்தில் உயிரிழந்துள்ளது.
மூலம்- 20min