Niederwil அருகே குடிபோதையில், இருந்த வாகன சாரதி ஒருவர், மற்றொரு வாகனத்தின் மீது மோதினார்.
இந்தச் சம்பவத்தில், மற்றைய காரின் சாரதி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடிபோதையில் இருந்த சாரதியும் காயமடைந்தார்.
இந்த விபத்து திங்கட்கிழமை மாலை 6:20 மணியளவில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த மற்றைய காரின் சாரதி, 89 வயதான பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் இருந்த சாரதியின் சாரதி உரிமத்தை Aargau கன்டோனல் பொலிசார் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்தனர்.
மூலம் -20min.