Grafenhausen அருகே கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் கார் மோதி படுகாயம் அடைந்த 13 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
92 வயதான சாரதி Grafenhausen இல் இருந்து Rothaus நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, வீதியை விட்டு விலகி 13 வயது சிறுவன் மீது மோதினார்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் , மீட்பு ஹெலிகொப்டர் மூலம் Basel பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் சனிக்கிழமை இறந்ததாக Freiburg பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம் -20min.