Gossau இல் நேற்று அடுத்தடுத்த பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்றுக் காலை 7:15 மணியளவில், A1 நெடுஞ்சாலையில், 38 வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற கார் சறுக்கி, விபத்துத் தடுப்பில் மோதி, பாதுகாப்புக் கோட்டில் வந்து நின்றது.
இச் சம்பவத்தில் சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர சேவைகளால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து நடந்த சிறிது நேரத்துக்குப் பின்னர், 32 வயதுடைய பெண் ஓட்டுநர் ஒருவர் A1 நெடுஞ்சாலையில் பிரேக் பிடித்த போது, சறுக்கிச் சென்று, விபத்துக்குள்ளானது.
எனினும்,பெண் ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
அதே இடத்தில் மற்றும் அதே நேரத்தில், இரண்டு கார்களுக்கு இடையே மற்றொரு கார் பின்புறம் மோதியதில் மற்றொரு விபத்து ஏற்பட்டது.
எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மூலம் -20min.