2025ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் முதலாவது குழந்தை, Thurgau கன்டோனில் உள்ள, The Münsterlingen மருத்துவமனையில் பிறந்துள்ளது.
அதிகாலை 12:47 மணிக்கு Nael Isaías என்ற அந்த ஆண்குழந்தை, பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 12:57 மணிக்கு சூரிச் 2025 ஆம் ஆண்டின் முதல் குழந்தை Zurich Triemli மருத்துவமனையில் பிறந்தது.
இந்த ஆண் குழந்தைக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
Zug கன்டோனல் மருத்துவமனையில் அதிகாலை 1:45 மணிக்கு லைலா ரோஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது.
The Wetzikon மருத்துவமனையில் அதிகாலை 3:31 மணிக்கு அபிநயா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.
48 சென்டிமீட்டர் உயரமும் 3080 கிராம் எடையும் கொண்ட இந்த குழந்தை குடும்பத்தின் இரண்டாவது குழந்தையாகும்.
மூலம்-20min.