21.6 C
New York
Wednesday, September 10, 2025

2025 ஆம் ஆண்டின் சிறந்த மீனாக zander அறிவிப்பு.

Sander lucioperca, லூசியோபெர்கா என அழைக்கப்படும் zander,  2025 ஆம் ஆண்டின் சிறந்த மீன் என சுவிஸ் மீன்பிடி கூட்டமைப்பால் (FSP) பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மீன் சமையலறையில் பிரபலமானது என்று மீன்பிடி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனாலும் சுவிட்சர்லாந்தில் இந்த வகை மீன்களின் இருப்பு  மிகவும் குறைவானது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து தொன் zander  மீன்களே சுவிஸ் நீரில் பிடிக்கப்படுகிறது.

எனவே இறக்குமதி மற்றும் மீன் வளர்ப்பு மூலம் மட்டுமே தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

முர்டென், க்ரூயர், ஷிஃபெனென், சிஹ்ல் மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரிகளிலும், லுகானோ ஏரியிலும் இந்த வகை மீன்கள் வாழ்கின்றன.

சுவிட்சர்லாந்தில் மத்திய பீடபூமி பகுதியில் உள்ள பல ஆறுகள், அணை நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களிலும் zander  மீன்கள் காணப்படுகின்றன.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles