20.1 C
New York
Wednesday, September 10, 2025

புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாகனத்தை மோதி தாக்குதல்- 15 பேர் பலி.

அமெரிக்காவில் நியூ ஒர்லியன்ஸில் உள்ள போர்பன் வீதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது,  பிக்கப் வாகனத்தை  கூட்டத்தின் மீது மோதியதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், 35 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை  பயங்கரவாத செயல் என்ற கோணத்தில் FBI  விசாரித்து வருகிறது.

தாக்குதல் நடத்தியவர் பொலிசாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

அவர், 42 வயதுடைய டெக்சாஸ்  மாநிலத்தைச் சேர்ந்த  ஷாமுட் டின் ஜபார் எனவும், முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரி என்றும் FBI அடையாளம் கண்டுள்ளது.

கொல்லப்பட்ட சந்தேக நபர், தாக்குதலின் போது வாகனத்தில் ISIS கொடியை வைத்திருந்ததாக FBI தெரிவித்துள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுடன் சாத்தியமான தொடர்புகளை விசாரித்து வருவதாகவும் FBI தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு முன்னர் சந்தேக நபர் தொடர்ச்சியான வீடியோ பதிவுகளை செய்ததாக அதிகாரிகள் கூறினர். அதில் அவர் ISIS இல் சேர்ந்ததாக கூறியுள்ளார்.

அதேவேளை, நெவாடாவில் உள்ள ட்ரம்ப்பின் ஹோட்டலுக்கு முன்பாக வாகன குண்டு ஒன்று வெடித்துள்ளது.

இதில் வாகனத்தில் இருந்தவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles