Swisscom 8 பில்லியன் யூரோக்களுக்கு (7.5 பில்லியன் பிராங்) Vodafone Italia வை வாங்கியுள்ளது.
டிசம்பர் 31ஆம் திகதி இதுதொடர்பான பரிவர்த்தனை நிறைவடைந்தது என்று Swisscom அறிவித்துள்ளது.
8 பில்லியன் யூரோ ஒப்பந்தம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முடிவடையும் என்று Swisscom முன்னர் எதிர்பார்த்தது.
ஆயினும், இத்தாலிய அதிகாரிகளிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளையும் Swisscom டிசம்பர் 20 ஆம் திகதிக்குள் பெற்றிருந்ததால், சற்று முன்னதாக இது நிறைவு செய்யப்பட்டது.
Vodafone Italia ஐ வாங்கியதைத் தொடர்ந்து, TIM க்குப் பின்னர், இத்தாலியில் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு வழங்குநராக சுவிஸ் குழுமம் மாறும்.
மூலம்- swissinfo