19.8 C
New York
Thursday, September 11, 2025

புகை பரவியதால் பாதிக்கப்பட்ட சுவிஸ் விமானப் பணியாளர் மரணம்.

ஒஸ்ரியாவில் இருந்த சூரிச் நோக்கிப் பயணம் செய்த சுவிஸ் விமானத்தினுள் புகை பரவியதால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட விமானப் பணியாளர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 30ஆம் திகதி புக்காரெஸ்டில் இருந்து சூரிச் நோக்கிப் பயணித்த சுவிஸ் விமானத்தினுள் புகை பரவியதால், Graz விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் 5 விமானப் பணியாளர்களும், 12 பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

ஏனையவர்கள் குணமடைந்த போதும் ஒரு விமானப் பணியாளர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வந்தார்.

அவர் மரணமடைந்துள்ளதாக சுவிஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

புகையை சுவாசித்தால்,  மூளை பாதிப்படைந்து அந்த இளம் ஆண் பணியாளர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles