18.2 C
New York
Thursday, September 11, 2025

முன்னெப்போதும் இல்லாத உறை பனிமழை – திணறும் சுவிஸ்.

சுவிட்சர்லாந்தில் நேற்றுமாலை தொடக்கம்  பெய்த உறைபனி மழையினால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. வழமையான போக்குவரத்துகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Engelberg

Engelberg OW வில் கறுப்பு பனிக்கட்டிகளால் மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற அனுபவத்தை அனுபவித்ததில்லை என ஒருவர் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக இரண்டு நிமிடங்கள் எடுக்கும் பாதையில் வாகனம் ஓட்டுவதற்கு சுமார் பத்து நிமிடங்கள் பிடித்தது என அவர் தெரிவித்துள்ளார்.

பாசல்

கறுப்பு பனிக்கட்டிகளால், வீதிகள் மற்றும் பாதைகளில் வழுக்கும் அபாயம் உள்ளது. உறைபனி மழையினால், மேல் பாசல் பகுதியில் பனி சறுக்கு நிலையை உருவாக்கியுள்ளது.

A1/A3 இல் பேடன் நோக்கி பயணித்த ஒருவர், மோட்டார் பாதையின் நிலைமைகள் மிகவும்  மோசமாக உள்ளது என்றும்,  நான் இதுவரை கண்டிராதளவுக்கு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது என்றும்,  வாகனம் ஓட்டுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. என்றும் தெரிவித்துள்ளார்.

பெர்ன்

கறுப்பு பனி காரணமாக, பெர்னில் ட்ராம் லைன் 6 இன் செயல்பாடு நேற்றிரவு தடைசெய்யப்பட்டது.

அத்துடன் ட்ராம் போக்குவரத்தில் தாமதங்கள் மற்றும் ரத்து இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

Basel-Landschaft

சனிக்கிழமை மாலை Basel-Landschaft முழு பிராந்தியத்திற்கும் Alertswiss எச்சரிக்கையை வெளியிட்டது.

வீதிகள் மற்றும் நடைபாதைகளில் பனிக்கட்டிகளால் பெரும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழுக்கும் வீதிகள் காரணமாக, விபத்துக்கள் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles