மோசமான பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழையால் சூரிச் விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று மாலை சுமார் 6:30 மணி முதல் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையத் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது.
இன்று மேலும் 12 விமானங்களுக்கு மேல் ரத்து செய்யப்பட்டன.
உறைபனி மழை விமானப் போக்குவரத்திற்கு கணிசமான சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
விமானங்களின் இறக்கைகளிலும் தண்ணீர் உறைகிறது.
சூரிச் விமான நிலையத்தில் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உறை பனி நீர் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
மூலம்- swisssinfo