21.6 C
New York
Wednesday, September 10, 2025

மோதிக் கொண்ட பனிச்சறுக்கு வீரர்கள்- ஜெர்மனியர் மரணம்.

Klosters இல் Parsenn Gotschna பனிச்சறுக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சறுக்கு விபத்தில்  ஜெர்மனியர் ஒருவர் உயிரிழந்தார்.

Schiferbahn நோக்கி இறங்கும் போது, ​​Kreuzweglift பள்ளத்தாக்கு நிலைய பகுதியில், இரண்டு பனிச் சறுக்கு வீரர்கள் மோதிக் கொண்டனர்.

இதையடுத்து, ஜெர்மனிய வீரர். ஒரு தகவல் பலகையில் மோதி மயக்கமடைந்தார்.

சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் Parsenn ski பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில்,  24 வயதான பனிச்சறுக்கு வீரர் காயம் அடைந்தார்.

விரைவான உதவிகள் வழங்கப்பட்ட போதிலும், அவர்,  பலத்த காயங்களால்,  உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய இரண்டாவது பனிச் சறுக்கு வீரர் லேசான காயம் அடைந்தார்.

Graubünden கன்டோனல் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles