18.2 C
New York
Thursday, September 11, 2025

பேர்னில் 18 மணி நேரத்தில் 43 விபத்துகள்.

பேர்ன் கன்டோனில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பெருமளவு விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை,  43 விபத்துக்கள் இடம்பெற்றதாக தகவல் கிடைத்துள்ளதாக பேர்ன் கன்டோனல்  பொலிசார் தெரிவித்தனர்.

பேர்ன் பிராந்தியத்தில் 11 விபத்துக்களும்,  பெர்னீஸ் ஓபர்லாண்ட் பிராந்தியத்தில் 17 விபத்துக்களும்,  மிட்டல்லேண்ட்-எம்மெண்டல்-ஒபெரார்காவ் பகுதியிலிருந்து 5 விபத்துக்களும்,  சீலண்ட்-பெர்னீஸ் ஜூரா பகுதியிலிருந்து 10 விபத்துக்களும் பதிவாகியுள்ளன.

பெரும்பாலான விபத்துக்கள் பொருள் சேதத்தை மட்டுமே விளைவித்தன.

இருப்பினும், ஐந்து விபத்துகளில், பொதுமக்கள் காயமடைந்தனர் எனினும், அவர்களுக்கு பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை.

பிரிபோர்க் கன்டோனிலும்30  வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

Vuisternens-devant-Romont மற்றும் Epagny ஆகிய இடங்களில், 10 வாகனங்கள் விபத்துக்குள்ளானதால், சாலைகள் இரண்டு மணி நேரம் மூடப்பட வேண்டியிருந்தது.

விபத்துக்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Giviez இல், பத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்களில்,  மூன்று பேர் சிறியளவில் காயம் அடைந்தனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles