Aargau கன்டோனில் கறுப்பு பனியால் சனிக்கிழமை மாலை சுமார் 20 போக்குவரத்து விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
பெரும்பாலான விபத்துக்களில் சொத்துக்கள் சேதம் அடைந்தன.எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
குளிர்கால நிலைமைகள் காரணமாக மரங்கள் விழுந்து, தற்காலிகமாக பல சாலைகளில் போக்குவரத்தை பாதித்தது என கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலைகளிலும் பல விபத்துகள் நடந்தன.
Mägenwil அருகே A1 இல், 19 வயது ஓட்டுநர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விபத்துக்குள்ளானார்.
கோடை கால டயர்கள் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.
விபத்துகள் மட்டுமின்றி, நான்கு மரங்கள் முறிந்து விழுந்ததால் தடைகள் ஏற்பட்டன.
இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் விரைவாக சாலைகளை சுத்தம் செய்தனர்.
கன்டோனல் பராமரிப்பு சேவை இரவு முழுவதும் பணியில் இருந்தது.
மூலம்- 20 min.