20.4 C
New York
Thursday, April 24, 2025

FrescaVita மென்பானத்தை அறிமுகப்படுத்திய மாணவர் குழுவில் தமிழ் மாணவன்.

Kantonsschule Zürich Nord இல் கல்வி கற்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏழு பேர் இணைந்து ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் ஊடாக, உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியத்துக்கு ஏற்ற FrescaVita என்ற மென்பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இவர்களால் தயாரிக்கப்பட்ட 900 மென்பான போத்தல்களில் 500 போத்தல்கள் விற்கப்பட்டு விட்டதாக, மாணவர் குழுவைச் சேர்ந்த Umamah Tayyab  என்ற 16 வயது மாணவி தெரிவித்துள்ளார்.

தாங்கள் எதிர்பார்த்த சுவை வரும் வரை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தற்போது அது சரியான சுவையை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் பானம் சுவையானது மட்டுமல்ல, சமூகத்திற்கு உதவியானதும்  கூட என்று இவர்கள் கூறுகிறார்கள்.

விற்கப்படும் ஒவ்வொரு போத்தலுக்கும், நாங்கள் 25 சதங்களை கரிடாஸ் சூரிச்சிற்கு நன்கொடையாக வழங்குகிறோம்.

தற்போது கடைகளில் விற்கப்படும் இந்த மென்பானத்தை விரைவில் இணையம் மூலம் விற்கவும் திட்டமிட்டுள்ளதாக மாணவர்கள் குழு தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவில் உள்ள மாணவர்களில் ஒருவர், கீர்த்தனன் என்ற தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்-20min.

Related Articles

Latest Articles