பெர்ன் கன்டோனில் உள்ள Büren an der Aare இல், மதுபானசாலையில் ஏற்பட்ட மோதலை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
62 வயதுடைய சுவிஸ் நாட்டவரே உயிரிழந்தவராவார்.
அவர் கடந்த 2ஆம் திகதி மதுபானசாலையில் ஏனையவர்களுடன் முரண்பட்டுள்ளார்.
அப்போது பாதுகாப்பு ஊழியர்கள் அவரை வெளியே அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாப்பு ஊழியர்கள் இரண்டு பேர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
மோதலின் போது, பாதுகாப்பு ஊழியர் ஒருவரால் தள்ளி விடப்பட்ட அந்த நபர் அந்த இடத்திலேயே மரணமாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான பெர்ன் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மூலம்- bluewin