26.7 C
New York
Thursday, September 11, 2025

தோட்டவேலை செய்து கொண்டிருந்தவர் உயரமான இடத்தில் இருந்து விழுந்து மரணம்.

டிசினோ நகராட்சியில் உள்ள புராஸ்கா இன்ஃபெரியரில்  நேற்று மதியம் 12.30 மணியளவில் தோட்ட  வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் உயரமான இடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

லுகானோ பகுதியைச் சேர்ந்த 89 வயதான சுவிஸ் நபரே உயிரிழந்துள்ளார்.

தோட்ட வேலை செய்து கொண்டிருந்த போது,  சுமார் பத்து மீட்டர் கீழே ஒரு ஓடையின் படுக்கையில் விழுந்துள்ளார் என்று டிசினோ கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மீட்புக் குழுவினரால் உடனடியாக  காப்பாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles