26.7 C
New York
Thursday, September 11, 2025

சூரிச்சில் அதிகரிக்கும் தொழிலாளர் பற்றாக்குறை.

சூரிச்சில் தொழிலாளர்கள் பற்றாக்குறை பொருளாதாரத்திற்கு பெரும் சவால்களை  ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

2050ஆம் ஆண்டுக்குள், 83,000 வேலையாட்கள் பற்றாக்குறை ஏற்படும் என, பொருளாதார விவகாரங்களுக்கான அலுவலகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

முதியோர் மற்றும் இளைஞர்களிடையே தொழிலாளர் சந்தையில் உள்ள இடைவெளி மற்றும் மொத்த மக்கள் தொகையில் வேலை செய்பவர்களின் வீதத்தில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை இதற்கு முக்கிய காரணம்.

அதிகளவு குடியேற்றத்தினால் கூட, முதுமையடைதலின் விளைவை தடுக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 60 ஆண்டுகளில் ஒரு பெண்ணின் கருத்தரித்தல் வீதம், 2.7ல் இருந்து 1.3 ஆக குறைந்துள்ளது.

பல ஆண்டுகளாக, இளைஞர்கள் நுழைவதை விட அதிகமானவர்கள் வயது மூப்பு காரணமாக வேலை சந்தையில் இருந்து வெளியேறுகிறார்கள்.

2029 ஆம் ஆண்டில் இந்த இடைவெளி அதிகமாக இருக்கும்.

சூரிச் கன்டோனில், 20 வயதுடையவர்களை விட 65 வயதுடையவர்கள் 16 சதவீதம் (2,700 பேர்) அதிகமாக இருப்பார்கள்.

அதன் பிறகு, இடைவெளி குறைந்தாலும், 2040 களில் மீண்டும் 18 சதவீதமாக (2,900 பேர்) அதிகரிக்கும்.

இதனால், தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது, பொருளாதார வேகம் குறைகிறது, தொழில் அமைப்பு மாறுகிறது, மேலும் நுகர்வோரின் வயதும் தேவையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles