26.7 C
New York
Thursday, September 11, 2025

நிலச்சரிவில் சிக்கிய கார் – ஓட்டுநர் பலி.

Tesserete  நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, Cimadera இல் உள்ள Via Cugnoli வில்  நிலச்சரிவில் சிக்கியது.

நேற்று  மாலை 4 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

உடனடியாக மீட்புக் குழுவினர் சென்று கார் ஓட்டுநரை மீட்ட போதும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

44 வயதான சுவிஸ் நாட்டவர் பலத்த காயங்களினால்  உயிரிழந்ததாக டிசினோ கன்டோனல் பொலிசார் உறுதி செய்தனர்.அவர் லுகானோ பகுதியில் வசித்து வந்தார்.

இதையடுத்து, அப்பகுதியை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தேவையான மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று நண்பகல் 12 மணி வரை பாதிக்கப்பட்ட சாலை மூடப்பட்டிருக்கும்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles