23.5 C
New York
Thursday, September 11, 2025

அவுஸ்ரேலிய விமான விபத்தில் சுவிஸ் பயணி பலி.

அவுஸ்ரேலியாவில் கடல் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுவிஸ் சுற்றுலாப் பயணி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் நகருக்கு அண்மையில் உள்ள  Rottnest Island  என்ற சுற்றுலாத் தீவில் இருந்து புறப்பட்ட, கடல் விமானமே விபத்துக்குள்ளானது.

நேற்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் சுவிஸ் மற்றும் டேனிஷ் சுற்றுலாப் பயணிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

மேலும் மூன்று பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

65 வயதான சுவிஸ் பெண், 60 வயதான டேனிஷ் பிரஜை மற்றும் 34 வயதான விமானி ஆகியோரே பலியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பயணிகள் இந்த விபத்தில்  விபத்தில் உயிர் தப்பியதாக மேற்கு அவுஸ்ரேலியா மாநில முதல்வர் ரோஜர் குக் தெரிவித்துள்ளார்.

இதில் 3 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles