Olten–Zürich HB பாதையில் Olten – Aarau இடையே ரயில் போக்குவரத்து நேற்றுக்காலை தடைப்பட்டுள்ளது.
மின் இணைப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த நிலை ஏற்பட்டதாக SBB தெரிவித்துள்ளது.
இதனால் பயணிகள் பெரிதும் பாதிப்புகளை எதிர்கொண்டனர்.
எனினும், நேற்று பிற்பகல் 2 மணிக்கு, ரயில் போக்குவரத்துக்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக SBB அறிவித்தது.
சில தாமதங்கள், ரத்து செய்தல்கள் அல்லது மாற்றுப்பாதைகள் நீடிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் கால அட்டவணையை தொடர்ந்து சரிபார்க்க வேண்டும்.
வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், என்றும், SBB தெரிவித்துள்ளது.
மூலம்- 20min.