சூரிச்சில் உள்ள Escher-Wyss-Platz இல், 193 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் வாடகைக்கு விடப்படவுள்ள நிலையில், குடியிருப்பாளர்களுக்கு முக்கியமான ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள், கார் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்.
அதைவிட வரி விதிக்கக்கூடிய வருமானம், வாடகையை விட நான்கு மடங்கிற்கு அதிகமாக இருக்கக்கூடாது.
விண்ணப்பதாரர்கள் சொந்தமாக கார் வைத்திருக்கக்கூடாது.
இங்கு 19 பார்க்கிங் இடங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட பாதி மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வளாகத்தில் 670 சைக்கிள் பார்க்கிங் இடங்கள் உள்ளன.
அடுக்குமாடி குடியிருப்பின் இருப்பிடம் மற்றும் அளவைப் பொறுத்து வாடகைகள் மாறுபடும்.
4.5 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் விலை மாதத்திற்கு 2,320 முதல் 3,420 பிராங்குகள் வரை இருக்கும்.
மிகவும் விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒன்று மேற்கு கோபுரத்தின் 22வது மாடியில் உள்ள 5.5 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இதன் மாத வாடகை 3,800 பிராங்குகள்.
அதேவேளை, வாடகைக்கு மானியம் இல்லை.
மூலம்- 20min.