Winterthur இல் காயமடைந்த நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் இதுபற்றி , சூரிச் கன்டோனல் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்ற போது, தலையில் காயங்களுடன் ஒரு பெண்ணைக் கண்டனர்.
24 வயதான கொசோவா பெண் ஒரு ஆணுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவர்களுக்கு ஏற்பட்ட மோதலில் அவரது தலையில் காயம் அடைந்தார்.
ஒரு சைக்கிள் ஓட்டுநர் நெருங்கியபோது, அந்த நபர், காயமடைந்த பெண்ணை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
காயமடைந்த பெண் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூலம்- 20 min