பாசலில் உள்ள கெய்சர்ஸ்பெர்கெர்ஸ்ட்ராஸில் 14 வயது சிறுவன் ஓட்டிய கார், பல வாகனங்களுடன் மோதியுள்ளது.
நேற்று முன்தினம் அதிகாலை ஐந்து மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களை சிறுவன் சேதப்படுத்தியதாக பாஸல் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் சிறுவன் ஓட்டிச் சென்ற காரும் சேதம் அடைந்துள்ளது.
மூலம்- 20 min