A23 நெடுஞ்சாலையில் எரிபொருள் தாங்கியுடன் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றுக் காலை 10:40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
75 வயதான ஓட்டுநர் ஆர்போனில் இருந்து சென் கலன் நோக்கி சென்றபோது, பாதையைக் கடந்து, எதிரே வந்த எரிபொருள் தாங்கி மீது மோதினார்.
இந்த விபத்தை அடுத்து, கார் அருகிலுள்ள புல்வெளியில் தூக்கி வீசப்பட்டது.
75 வயதான ஓட்டுநர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தின் போது எரிபொருள் தாங்கி சேதமடைந்து, சுமார் 60 லிட்டர் டீசல் வெளியேறியது.
தீயணைப்புத் துறையினர் கசிந்த எரிபொருளை உறிஞ்ச நடவடிக்கை எடுத்தனர்.
ஓட்ட முடியாத நிலையில் இருந்த எரிபொருள் தாங்கியை, ஒரு கிரேன் மூலம் மீட்டெடுக்க, வேண்டியிருந்த து.
அதற்காக, 10,000 லிட்டர் டீசல் மற்றொரு தாங்கியில் செலுத்த வேண்டியிருந்தது.
மீட்புப் பணி மற்றும் காவல்துறையின் விபத்து அறிக்கை காரணமாக ஆர்பன் திசையில் மணிக்கணக்கில் பாதை மூடப்பட்டது.
இதனால் பரபரப்பான சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மூலம்- 20 min