18 C
New York
Friday, September 12, 2025

Solothurn கன்டோனல் கவுன்சில் தேர்தலில் வரலாற்றில் அதிக வேட்பாளர்கள்.

Solothurn கன்டோனல் கவுன்சிலின் 100 ஆசனங்களுக்கு,  588 ஆண்களும் பெண்களும் வேட்பாளர்களாகப்  போட்டியிடுகின்றனர்.

மார்ச் 9 இல் நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான பதிவு காலக்கெடு திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது.

கன்டோனல் கவுன்சிலுக்கு போட்டியிட 588 வேட்பாளர்கள் ஐந்து மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களை விட ஐந்து பேர் கூடுதலாகப் போட்டியிடுகின்றனர்.

கன்டோனல் கவுன்சிலுக்கு இதற்கு முன் ஒருபோதும் இவ்வளவு வேட்பாளர்கள் போட்டியிட்டதில்லை.

இவர்களில் இளைய வேட்பாளர் ஜோன் கால்டன்பாச். ஃபெல்ட்ப்ருன்னனில் வசிக்கும் அவர், பெப்ரவரி 6 ஆம் திகதி 18 வயதாகும் கன்டோனல் பள்ளி மாணவன்.

மூத்த வேட்பாளர் சார்லோட் கான்சோ. ஓல்டனைச் சேர்ந்த 77 வயதான அவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் மற்றும் SVP க்காக போட்டியிடுகிறார்.

அனைத்து வேட்பாளர்களின் சராசரி வயது 42.

மூலம்-  bluewin

Related Articles

Latest Articles