தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நேற்று விசித்திர பட்டப் போட்டி இடம்பெற்றது.
வண்ணமயமான, பல்வேறு வடிவங்களில், பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
இம்முறை வானிலை சீரின்றி இருந்த போதும், மழைக்கு மத்தியில் பட்டத் திருவிழா இடம்பெற்றது.
இந்த பட்டத் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள், யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்தனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த நிகழ்வில் குவிந்திருந்தனர்.