Chaffhausen நகரில் Frohbergstrasse இல் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று அதிகாலை 1:40 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்னர் ஐந்து குடியிருப்பாளர்களில் நான்கு பேர் தாங்களாகவே அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.
தீயணைப்பு பிரிவினர், 78 வயதுடைய ஒரு பெண்ணை எரிந்து கொண்டிருந்த வீட்டில் இருந்து மீட்டனர்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அத்துடன் அவர்கள் வளர்த்த நாயும் எரிந்த வீட்டினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
மூலம்- 20min.