18.2 C
New York
Thursday, September 11, 2025

239,000 பிராங் ஓய்வூதியம் பெறவுள்ள வயோலா அம்ஹெர்ட்.

பாதுகாப்பு அமைச்சர் வயோலா அம்ஹெர்ட் எதிர்பாராத விதமாக பெடரல் கவுன்சிலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பெடரல் கவுன்சிலராக இருந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தனது பதவிக் காலத்தில்  பெற்ற வருமானத்தில் பாதியை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.

பாதுகாப்பு அமைச்சர் வயோலா அம்ஹெர்ட்  தற்போது 478,000 பிராங்குகளை ஆண்டு சம்பளமாக பெறுகிறார்.

எனவே,  அவர் 239,000 பிராங்குகள் ஓய்வூதியம் பெறுவதற்கான  உரிமை உள்ளது.

குறைந்தது நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்த அனைத்து முன்னாள் பெடரல் கவுன்சிலர்களுக்கும் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு.

இருப்பினும், பதவியில் இருப்பவர்கள் ராஜினாமா செய்த பின்னர் வருமானம் பெற்றால் ஓய்வூதியம் குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles