2024 ஆம் ஆண்டில், ஜெனீவா விமான நிலையம் 17.8 மில்லியன் பயணிகளை வரவேற்றது.இது 2023 ஐ விட 8% அதிகமாகும்.
இங்கு விமானங்களின் மொத்த தரையிறக்கங்கள் மற்றும் புறப்படுதல்களின் எண்ணிக்கை 179,106 ஐ எட்டியது.
இது முந்தைய ஆண்டை விட 3.6% அதிகமாகும்.
ஆயினும், 2019 உடன் ஒப்பிடும்போது, பயணிகள் எண்ணிக்கை 0.7% குறைவாகவும், விமான இயக்கங்கள் 3.7% குறைவாகவும் உள்ளன.
கோவிட் பரவலுக்கு முந்தைய ஆண்டில், ஜெனீவா விமான நிலையம் 17.9 மில்லியன் பயணிகளையும் 186,043 இயக்கங்களையும் பதிவு செய்தது.
2025 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த பயணிகள் மற்றும் விமானப் போக்குவரத்தின் அளவு 2019 ஐ விட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo