உலக பொருளாதார மன்ற (WEF) கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை டாவோஸில் தொடங்குகிறது.
இதில் உலகின் பல நாடுகளின் தலைவர்கள், வணிக பிரமுகர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்வதால், டாவோஸில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போர் விமானங்கள் நிரந்தர ரோந்துப் பணியில் ஈடுபடும்.
விரிவாக்கப்பட்ட ரேடார் அமைப்பும் பயன்படுத்தப்படுகிறது.
டாவோஸ் மீதான வான்வெளி ஜனவரி 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 46 கிலோமீட்டர் சுற்றளவில் கட்டுப்படுத்தப்படும்.
அதேபோன்று ஜனவரி 20 திங்கள் மற்றும் ஜனவரி 25 சனிக்கிழமை ஆகிய நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வான்வெளியில் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களுக்கும் இது பொருந்தும்.
கிராபுண்டன் கன்டோனில் இராணுவம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
இதகென ஆயுதப்படைகளின் 5,000 உறுப்பினர்களை அனுப்ப நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சுவிட்சர்லாந்து முழுவதிலுமிருந்து அனைத்து பொலிஸ் படைகளும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன.
உலகளவில் பயங்கரவாத ஆபத்து இன்னும் அதிகரித்துள்ளது.
உலகளவில் சைபர் தாக்குதல்களின் ஆபத்து அதிகமாக உள்ளது.
சுவிட்சர்லாந்து முழுவதும் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்- bluewin