காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Biel இல் உள்ள Güterstrasse இல் வசிக்கும் ஒருவர் பல நாட்களாக கிடைக்கவில்லை என்று பெர்ன் கன்டோனல் பொலிசாருக்கு வியாழக்கிழமை இரவு 9.45 மணியளவில், தகவல் கிடைத்தது.
இதன் பின்னர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இறந்த நிலையில் பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று உறுதியாகியுள்ளது.
இறந்தவரின் அடையாளத்திற்கான தடயங்கள் உள்ளன, ஆனால் இன்னமும் முறையாக அடையாளம் காணப்படவில்லை.
இது தொடர்பாக சாட்சிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
மூலம்- bluewin