சூரிச்சிலிருந்து லிஸ்பனுக்குச் சென்ற ஈஸிஜெட் விமானத்தில் இரண்டு பெண் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது,
நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
அவர்கள் சண்டையில் ஈடுபட்டதால், விமானம் அவசரமாக சூரிச்சிற்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரண்டு பெண்களும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வாக்குவாதம் செய்து சண்டையிட்டனர் என்று பயணி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் வேறு வழியின்றி, விமானம் அவசரமாக சூரிச்சில் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து, சூரிச் விமான நிலையத்தில், இரண்டு பெண்களும் ஒரு ஆணும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனால் இரவு 10 மணிக்கு விமானம் மீண்டும் லிஸ்பனுக்கு புறப்பட்டுச் சென்றது.