பேர்ன் கன்டோனில் Gümligen இல் உள்ள Füllerichstrasse இல் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து விரைந்து சென்று படுகாயம் அடைந்த நிலையில் இருந்த பெண்ணை மீட்டனர்.
அவருக்குத் தெரிந்த ஆண் ஒருவரே கூரிய ஆயுதத்தினால் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றதாக தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதல் நடத்தினர்.
இதன்போது சந்தேக நபர் Rüfenacht இல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலம்- 20min.