Zug கன்டோனில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்த மாணவன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
chat message மூலம் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இதை அறிந்த பொலிசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தனர்.
இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் வயது குறைந்தவர் என்பதால், பொலிசார் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
மூலம்- 20min.