இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 15 மாதங்களாக நடந்து வந்த போர் இன்று முடிவுக்கு வருகிறது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு முதற்கட்டமாக 6 வாரகால போர் நிறுத்தம் அமுலுக்கு வரும்.
அதையடுத்து பணயக் கைதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்படவுள்ளனர்.
33 இஸ்ரேலிய பணயக் கைதிகளும், 1890 பலஸ்தீனர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்.
இன்று பிற்பகல் 4 மணிக்கு, முதற்கட்ட இஸ்ரேலியப் பயணக் கைதிகள் விடுவிக்கப்பட்டு, இஸ்ரேலுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
15 மாதங்களாக சுரங்கப் பாதைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், போதிய உணவின்றி ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும், உள ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேலிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே உடனடியாக அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்க மருத்துவர்கள், தாதிகள் கொண்ட குழு தயார்படுத்தப்பட்டுள்ளது.