பெர்னில் உள்ள Bahnhofsplatz இல், பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய 25 வயது இளைஞனுக்கு 4350 பிராங் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் ரயில் நிலையம் அருகே, துரித உணவு பொட்டல கழிவுகளை, பொலிஸ் அதிகாரிகளின் கால்களுக்கு முன்னால் வீசியெறிந்து போது, அவர்களை அவமானப்படுத்தினார்.
இந்த ஆத்திரமூட்டல் நடவடிக்கையை அடுத்து அவரை பொலிஸ் அதிகாரிகள் தடுக்க முயன்ற போது, அவர் ஒரு பொலிஸ் அதிகாரியைத் தாக்கி காயப்படுத்தினார்.ஏனைய அதிகாரிகளை திட்டினார்.
வாயில் இருந்த உணவுத் துண்டுகளை அவர்களின் மீது துப்பினார்.
அவர் ஒரு அதிகாரியின் தாடையை உதைத்து,உடைத்தார். அவரது கையில் கடிக்க முயன்றார்.
இறுதியாக, அந்த நபரை கைவிலங்கு போட்டு பொலிசார் கைது செய்தனர்.
அவர் கோகோயின் பயன்படுத்தியிருந்தார்.
இறுதியில் அவர் மீது சுமத்தப்பட்ட வன்முறை , அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல், வாய்மொழி துஷ்பிரயோகம், அதிகாரப்பூர்வ செயலைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் மற்றும் கழிவுச் சட்டத்தை மீறியதற்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
அந்த நபருக்கு மொத்தமாக, 4350 பிராங் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கும் தலா 400 பிராங்குகள் செலுத்த வேண்டும்.
20 ஆண்டுகள் அவர் நன்னடத்தை கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பார்.
மூலம்- bluewin