St. Ursen FR இல் சனிக்கிழமை இரவு 11:10 மணியளவில் வீடு ஒன்றும் கொட்டகையும், தீப்பிடித்து எரிந்துள்ளன.
Wünnewil, Tafers மற்றும் Düdingenஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தினர்.
கட்டிடம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்தில் இருந்த மூன்று குடியிருப்பாளர்கள் சரியான நேரத்தில் வெளியேறியதால் எந்த பாதிப்பு ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
மூலம் – 20min.