சென்டர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும், கெர்ஹார்ட் பிஃபிஸ்டர் (Gerhard Pfister) , சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பு அமைச்சர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் வயோலா ஆம்ஹெர்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்று இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்டர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும், கெர்ஹார்ட் பிஃபிஸ்டர், பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படலாம் என ஊகங்கள் நிலவிய நிலையில், அதனை நிராகரித்துள்ள அவர், அமைச்சரவைப் பதவி தனக்குப் பொருந்தாது என்று கூறியுள்ளார்.
புதிய பாதுகாப்பு அமைச்சர் எதிர்வரும் மார்ச் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளினாலும் தெரிவு செய்யப்படுவார்.
மூலம்- swissinfo