Lower Valais இல் சனிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்த பனிமலைச் சுற்றுலா வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
27 வயதான அந்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், சியோனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நேற்று அவர் மரணமானார் என Valais கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை கிராண்ட் டேவ் சிகரத்திலிருந்து ஒரு பாறை பள்ளத்தாக்கில் இறங்கும்போது, ஏற்பட்ட பனிச்சரிவில் அந்த இளைஞன் பல நூறு மீட்டர் கீழே அடித்துச் செல்லப்பட்டு பனியால் புதைக்கப்பட்டார்.
மூலம்- Bluewin