Solothurn கன்டோனில் உள்ள Dulliken இல், திங்கட்கிழமை மதியம் பாதசாரிக் கடவையில், கார் மோதி 11 வயது மாணவி ஒருவர் காயம் அடைந்தார்.
குறித்த மாணவி மதியம் 1 மணியளவில், பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற போது, கார் ஒன்று அவரை மோதி விட்டுத் தப்பிச் சென்றது.
அந்த காரை ஓட்டிய பெண்ணின் அடையாளத்தை பொலிசார் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்,
அவர் 60 முதல் 80 வயதுடைய குட்டையான, நரைத்த வெள்ளை முடி கொண்ட பெண் என்று நம்பப்படுகிறது.
மூலம்-20min