21.6 C
New York
Wednesday, September 10, 2025

ஜெனிவாவில் குண்டுப் பொதி- கப்பம் கோரிய கும்பல் கைவரிசை.

ஜெனிவாவில் உள்ள Rue François-Diday இல் உள்ள நிதி மாவட்டத்தில் நேற்றுக் காலை 9:10 மணியளவில், வெடிபொருள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு பொதி  கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் வெடிபொருட்களை கண்டறிந்து அகற்றும் பிரிவினர் சம்பவ இடத்தில் இருந்தனர்.

பொதியின் தோற்றம் மற்றும் உள்ளடக்கங்களின் சரியான தன்மையைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக பெடரல் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு குப்பைத் தொட்டியின் அருகில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொதியின் அருகே, குண்டுகளை அகற்றும் நிபுணர்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saint-Jean மற்றும் Petite-Boissière  ஆகிய இடங்களில் இரண்டு Patek Philippe ஊழியர்கள் வெடிபொருட்களால் குறிவைக்கப்பட்டனர்.

Patek Philippe  கடிகார உற்பத்தியாளரிடம் பல மில்லியன் பிராங் கப்பம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பொதிக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.

Patek Philippe இன் கணக்குகளைச் சரிபார்க்கும் BfB அறக்கட்டளை நிறுவனம், பொதி கண்டுபிடிக்கப்பட்ட  இடத்தில் உள்ளது.

டிசம்பரில், இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு சகோதரர்கள் பெட்போல்  அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இளையவருக்கு தற்காலிக விடுதலை வழங்கப்பட்டது. மூத்தவர் இன்னும் காவலில் உள்ளார்.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles