சுவிட்சர்லாந்தில் பருவகால காய்ச்சல் குறைந்து வருகிறது.
நேற்று வெளியிடப்பட்ட, மத்திய பொது சுகாதார அலுவலகத்தின் (FOPH) அண்மைய புள்ளிவிவரங்களின்படி, ஆய்வகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் தொற்று கடந்த வாரம் கிட்டத்தட்ட 2,340 இலிருந்து 2,000 க்கும் குறைவாகக் குறைந்துள்ளது.
கடந்த வாரம், சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீனில் 1,988 ஆய்வகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் தொற்றுகள் காணப்பட்டன.
இது ஜனவரி தொடக்கத்தில் இருந்த எண்ணிக்கைக்கு சமனானது.
இந்த பருவத்தின் காய்ச்சல் உச்சம் ஜனவரி 6 முதல் 12 வரை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் 2,338 உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன.
சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, ஜூரா கன்டோன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
100,000 குடியிருப்பாளர்களுக்கு, 43 பேர் என்ற அடிப்படையில உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் தொற்றுகள் அங்கு உள்ளன.
டிசினோ (41.93) மற்றும் கிளாரஸ் (40.42) ஆகியவை சுவிசின் சராசரியான 100,000 பேருக்கு 22 என்ற எண்ணிக்கையை விட கணிசமாக அதிக காய்ச்சல் விகிதங்களைக் கொண்டுள்ளன.
ஜெனீவா (34.32), நியூசாடெல் (29.73) மற்றும் வௌட் (27.9) ஆகிய கன்டோன்களில் இடங்களில் காய்ச்சல் பரவலாக உள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் ஆய்வகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட காய்ச்சல் தொற்றுகள் மட்டுமே என்பதால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.
டிசம்பர் நடுப்பகுதியில் பருவகால காய்ச்சல் வெடிப்பு தொடங்கியது.
திடீர் காய்ச்சல் (38°C க்கு மேல்), இருமல் அல்லது தொண்டை வலி ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும்.
மூலம் – Swissinfo