11.4 C
New York
Monday, April 27, 2026

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய அர்ச்சுனா கைது- 29ஆம் திகதி வரை விளக்கமறியல்.

இளவாலை பொலிசாரால் இன்று காலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சனிக்கிழமை யாழ்ப்பாணத்தின் பெரியவிளான் பகுதியில் ஒரு பெண்ணை துப்பாக்கியைக் காட்டி சுடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இன்று காலை கைது செய்யப்பட்ட அர்ச்சுனா இராமநாதனை பொலிசார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர்.

இதன்போதே ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சனிக்கிழமை பெரிய விளானில் உள்ள காணியை அர்ச்சுனா சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​அங்கு வந்த இரண்டு பெண்கள், அந்த நிலத்தின் ஒரு பகுதியை உரிமை கோரி அவருடன் வாக்குவாதம் செய்தனர்.

இந்த வாக்குவாதம் முற்றிய போது அர்ச்சுனா பெண்களை தாக்கியதுடன், துப்பாக்கியிருந்தார்.

இதுதொடர்பான காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுடன் முரண்பட்ட ஒரு பெண் 1 வயதுக் குழந்தையுடன் நேற்று கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles